எதிர்காலம் இல்லாத முதியவர்- ஜோ பைடனை கடுமையாக சாடிய கிம் யோ ஜாங்!
வட கொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் சகோதரி, அமெரிக்காவின் ஜோ பைடனை வருங்காலமில்லாத முதியவர் என கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தென் கொரிய ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் பேசிய ஜோ பைடன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கடுமையாக எச்சரித்துள்ளார்.மேலும் வடகொரிய தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்தால், அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்றும், வட கொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் பதவி பறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதியின் சகோதரியான கிம் யோ ஜாங் ஜோ பைடனின் மிரட்டலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.முதலில் பிற நாட்டினர் எப்படி எங்கள் நாட்டின் ஆட்சியை முடிவு கட்டுவோம் என கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தேவையற்ற திட்டம் தீட்டுகிறார்கள்’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கான பொறுப்பை ஏற்கும் திறன் இல்லாத, எதிர்காலம் இல்லாத ஒரு வயதான முதியவர் தான் ஜோ பைடன்.’அவருக்கு சேவை செய்யும் பண்பு மிகவும் அதிகம் என்பதால், அந்த அளவில் இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்று எடுத்துக்கொள்ளப்படலாம். இந்நிலையில் அவரது பதவிக் காலத்தின் இரண்டு ஆண்டுகள் மீதமுள்ளது,’ என்று கிம் யோ ஜாங் கடுமையாக சாடியுள்ளார்.
எதிரிகள் அணு ஆயுதப் போர்ப் பயிற்சிகளை நடத்துவதில் எவ்வளவு அதிகமாக உயிரிழந்து போகின்றார்களோ, மேலும் கொரிய தீபகற்பத்தின் அருகே அணுசக்திச் சொத்துக்களை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு நமது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவது வலுவாக மாறும்” என்று கொரிய மத்திய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.