உலகளவில் காத்திருக்கும் ஆபத்து – தயாராகுமாறு எச்சரிக்கும் WHO

உலகளவில் எதிர்காலத்தில் பரவக்கூடிய பெரிய அளவிலான நோய்களைக் கையாள நாடுகள் முறையாகத் தயார்செய்துகொள்ள வேண்டும் என உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் சூழலில் மூவாண்டு காலம் வசித்தது பலருக்கு வலி, இழப்பு, சர்ச்சை போன்றவற்றை ஏற்படுத்தியதாக டெட்ரோஸ் கூறினார்.
நாடுகள், நோய்ப் பரவல் காலத்திற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும், COVID-19 காலக்கட்டத்தில் தயார்நிலையில் இருந்த இடைவெளிகளைச் சரிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வசதியுள்ளோருக்கு மட்டுமல்லாது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்றும் டாக்டர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டார்.
காஸாவில் சண்டை நிறுத்தம் குறித்த உலகச் சுகாதார நிறுவன நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
காஸா மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு நிவாரண முயற்சிகள் இல்லை என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுகாதாரத் தாக்கம் பற்றியும் பேசப்பட்டது.