உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தயாராகும் ஹேமா பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச, அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைக்கத் தயாராக உள்ளார்.
தனது தாயார் ஏற்கனவே அந்த வீட்டைப் பயன்படுத்துவதில்லை எனவும், தானும் சிந்தித்து அரசிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
தனது தாயார் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்ததில்லை என்றும் தனியொரு வீட்டில் வசிப்பதாகவும் கூறும் எதிர்க்கட்சித் தலைவர், தந்தையின் ஓய்வூதியத்தை தாய் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தேசிய மக்கள் படை எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றஞ்சாட்டியதுடன், எதிர்க்கட்சித் தலைவரின் தாயார் இன்னமும் அரசாங்கச் சலுகைகளைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறியது.
தமது அரசாங்கத்தின் கீழ், ஹேமா பிரேமதாச உள்ளிட்டவர்களின் பராமரிப்பை அரசாங்கம் கைவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.