உணவகக் கழிப்பறையில் ரகசிய கேமரா: பிரித்தானியாவில் அதிர்ச்சி!
பிரித்தானிய பெண்களே உஷார்! உணவகக் கழிப்பறையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய கேமரா – அதிர்ச்சி தகவல்! (UK Women Beware! Secret camera found in restaurant toilet – Shocking details!)
பிரித்தானியாவில் லெஸ்டர் (Leicester) எனும் இடத்தில் உள்ள உணவகம் ஒன்றின் கழிப்பறையில், ரகசிய கேமரா (Hidden Camera) மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லெஸ்டர் (Leicester) நகரில் உள்ள கிகுஜிலிங் ஸ்குயிட் (‘Giggling Squid’) என்ற தாய்லாந்து உணவகத்திற்கு (Restaurant), கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் 32 வயதான பெண் ஒருவர் தனது துணையுடன் சென்றுள்ளார். அவர் உணவு அருந்திய பின் அங்கிருந்த கழிப்பறையைப் (Toilet) பயன்படுத்தியுள்ளார்.
அப்போது, டாய்லெட் சீட்டின் (Toilet Seat) அடியில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை அவர் கவனித்துள்ளார். உற்று நோக்கியபோது, கிச்சன் ரோலால் (kitchen roll) சுற்றப்பட்ட ஒரு சிறிய கருப்பு நிற கேமரா லென்ஸ் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த கேமரா இணையத்துடன் இணைக்கப்பட்டு, காட்சிகளை நேரலையாக (Live-streaming) பதிவு செய்யும் வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பெண் கூறுகையில் “எனக்கு வாந்தியே வந்துவிட்டது” – பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதபோதிலும் மற்றவர்களும் இது போல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, பிபிசி (BBC) ஊடகத்திடம் பேசுகையில் தனது மனவேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
“நான் அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது போலவும், வாந்தி வருவது போலவும் (felt sick) உணர்ந்தேன். யாரோ ஒருவர் அந்தரங்கமாகப் பார்ப்பது அருவருப்பானது. கழிப்பறை போன்ற தனிப்பட்ட இடத்தில் கூட பாதுகாப்பு இல்லை என்பது என்னை மிகவும் பயமுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து லெஸ்டர்ஷயர் (Leicestershire) காவல்துரைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. காவல்துரையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேமராவைக் கைப்பற்றினர். உணவக நிர்வாகம் காவல்துரையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் முன், மறைவான இடங்களை ஒருமுறை சோதித்துப் பாருங்கள்.
குறிப்பாக டாய்லெட் சீட்டின் அடியில், மூலை முடுக்குகளில் ஏதேனும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அல்லது விளக்குகள் தெரிகிறதா என கவனியுங்கள்.
சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டால், உடனடியாக அங்கிருக்கும் ஊழியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவியுங்கள்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்





