உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலினால் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளில் வைத்தியர்கள், அவசர சேவை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்யாவும் உக்ரைனும் நேற்றைய தினம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.





