செய்தி வட அமெரிக்கா

இழந்த இடத்தை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ள டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், டெக்சஸின் வாகோ நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக டிரம்ப் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், குடியரசுக் கட்சியினால் இது தொடர்பிலான அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலே, வாகோ நகரில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட டிரம்ப், தான் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால், எதிர்ப்பாளர்களின் ஆட்சியை வீழ்த்தி அமெரிக்காவை மீண்டும் சுதந்திர நாடாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு தான் மீண்டும் ஜனாதிபதியானால் எதிர்ப்பாளர்களின் ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவை மீண்டும் சுதந்திர நாடாக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் நியூயார்க் பண மோசடி விசாரணை ஒரு சூனிய வலை என்றும் டிரம்ப் சாடியுள்ளார். அதேவேளை டோனல்ட் டிரம்ப், பல்வேறு குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டாலும் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி