செய்தி

இலங்கையில் 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறையா? ஆராயும் அதிகாரிகள்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வாரத்தில் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொது விடுமுறை என்பதால், மீதமுள்ள நாட்கள் குறித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாலும், தூரத்தில் வசிக்கும் ஆசிரியர்கள் வாக்களிப்பதற்காக விடுமுறை எடுப்பதாலும், அந்த நாட்களில் பாடசாலைகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் எனிளும், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர், வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!