இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!
மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க – பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles – IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ரிற் ஜேர்னல் (the wall street journal) செய்தி தளம் கூறுகிறது.
டியாகோ கார்சியா ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மிற்றர் (2, 300 இல் இருந்து 2. 500 மைல்கள்) வரையான தூரத்தில் அமைந்துள்ளது.
ஆகவே இத் தாக்குதல், அமெரிக்க – இந்திய கூட்டுப் படைத்தளத்திற்கு மாத்திரமல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தோ – பசுபினக் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்ற தொனியில் அச் செய்தி விமர்சித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் இரண்டு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தவோல் ஸ்ரிற் ஜேர்னல் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இடை மறிப்புச் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியபோதும், அதனை உறுதிப்படுத்த முடியிவ்லை எனவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல் SM-3 இன்டர்செப்டர் (SM-3 interceptor) டியாகோ கார்சியா தரித்து நிற்கிறது.
30 கிலோ மீற்றர் சதுரப் பரப்பைக் கொண்ட டியாகோ கார்சியாவில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டுப்படைத் தளம் அமைந்துள்ளது.
டியாகோ கார்சியாவில் ஆக குறைந்தது 4 அயிரம் பேர் மாத்திரமே வாழ்கின்றனர். படையினரும் படைகளுக்கு உதவியளிக்கும் பணியாளர்களும் அங்கு அதிகமாக வாழ்கின்றனர்.
இத் தாக்குதல் ஊடாக, உலகின் எந்தப் பகுதிகளுக்கும் தன்னால் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும், அமெரிக்க தளங்களை இனம் காண முடியும் எனவும் ஈரான் காண்பித்துள்ளது.
அமெரிக்க – பிரித்தானிய படை உயர் அதிகாரிகள், அதிர்ச்சியடைந்துள்ளதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் (economictimes) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதலை 2,000 கிமீ (1,250 மைல்கள்) வரை கட்டுப்படுத்தியுள்ளதாக. கடந்த மாதம் இந்தியா டுடேக்கு (India Today)அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி கூறியிருந்தார்.
ஆனாலும், டியாகோ கார்சியா மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாற முயற்சிக்கவில்லை என்று அப்பாஸ் ஆராச்சி சுட்டிக்காட்டியதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகளை மையப்படுத்திய பிரதான ஆங்கில செய்தி ஊடகங்கள், தாக்குதல் பற்றிய “அச்சம்” – “ஆபத்து” போன்றவற்றை நேரடியாக ஏற்கத் தயங்குவதை அவதானிக்க முடிகிறது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-





