ஆபத்தான காற்றின் தரத்தால் போராடும் டில்லி – கட்டுமானப் பணிகளும் தடை
இந்தியாவின் புதுடில்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான வகுப்புகளை நிகழ்நிலையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியத் தலைநகரம் ஆபத்தான காற்றின் தரத்துடன் போராடுவதால் கட்டுமானப் பணிகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளிர்காலம் நிலவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த பகுதிகளில் எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசைக் குறைப்பதற்காக 40 ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையிலும், காற்றின் மாசு குறையவில்லை என டெல்லி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாள் ஒன்றுக்கு சுமார் 25 முதல் 30 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை பனி மூட்டம் காரணமாகவ டெல்லி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, 75 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





