அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்: ‘வெறுப்புணர்வு’ குழுக்களுக்குத் தடை
அவுஸ்திரேலியாவில் மத மற்றும் இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் அமைப்புகளைத் தடை செய்யும் புதிய சட்டவரைவை தொழிலாளர் கட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு அமைப்பை ‘வெறுப்புணர்வு குழுவாக’ (Hate Group) அறிவிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் அவுஸ்திரேலிய பாதுகாப்பு உளவு அமைப்பான ‘ஏசியோ’ (ASIO) தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களில் உறுப்பினராக இருப்பதோ அல்லது அவர்களுக்கு ஆதரவளிப்பதோ கடும் குற்றமாகக் கருதப்படும்.
இத்தகைய அமைப்புகளை வழிநடத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு. இதற்கிடையே, புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே, ‘நேஷனல் சோசலிஸ்ட் நெட்வொர்க்’ ( National Socialist Network) என்ற நவ-நாஜி (neo-Nazi) அமைப்பு தன்னைத் தானே கலைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பேணவும் இந்த ‘மிகக்கடுமையான’ சட்டங்களைக் கொண்டு வருவதாக பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.





