அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு Golden Card Visa – ட்ரம்பின் புதிய திட்டம் நடைமுறைக்கு
அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது உலகம் முழுவதும் பலரதும் கனவு. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் தங்கி வேலை செய்வதையும் குடியேறுவதையும் கடுமையானதாக மாற்றியுள்ளது.
இதனால் விசா பெறுவது கடினமாகவும், ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள் கூட தங்களது நிலையை பாதுகாத்து நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்ன் ட்ரம்ப் நிர்வாகம் Golden Card Visa எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோல்ட் கார்டு விசா (Golden Card Visa )என்றால் என்ன?
இந்த விசா அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி வேலை செய்யவும் குடியுரிமை நிலையை பெறவும் உதவுகிறது.
வெளிநாட்டவர்கள் அமெரிக்க அரசுக்கு 1 மில்லியன் USD செலுத்த வேண்டும் என்பதே இந்த விசாவுக்கான முக்கிய நிபந்தனை. இந்த பணத்தை திரும்ப பெற முடியாது.
மேலும் $15,000 செயலாக்க கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது.
Golden Card Visa கிடைத்தால், கிரீன் கார்டு போன்று நிரந்தர குடியுரிமை கிடைக்கும். மேலும் பல நன்மைகள் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏன் இந்த திட்டம்?
H1B போன்ற வேலைவாய்ப்பு விசா இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் வழியாக இருந்தாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவில் வேலை செய்யும் திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் (H1B visa holders) குடியேறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வசிப்பது, வேலை பார்க்குவது கடினமாகி விட்டது.
இதற்கான மாற்றாகவே Golden Card Visa அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசா மூலம், பணம் செலுத்தும் திறமையுள்ள வெளிநாட்டவர்கள் நேரடியாக அமெரிக்காவில் குடியுரிமையைப் பெற முடியும்.
Golden Card Visa விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://trumpcard.gov என்ற உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் , Basic Golden Cardக்கு 1 million USD கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் $15,000 செயலாக்க கட்டணமும் சேர்க்கப்படுகிறது.
Corporate Golden Card – நிறுவனங்களுக்கு பயன்படும் விசா
நிறுவனங்களுக்கு தேவையான திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அழைக்க, Corporate Golden Card Visa அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு 2 million USD செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை sponsor செய்து அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்தலாம்.
அதனால், நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை நேரடியாக அமெரிக்காவுக்கு கொண்டுவர முடியும்.
இதை எதிர்க்கட்சிகள் “குடியுரிமை விற்பனை” என விமர்சித்தாலும், வருமானம் தரும் திட்டமாகவும் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு
விண்ணப்பதாரர்களை திறமை மற்றும் முதலீட்டுத் திறன் அடிப்படையில் தெரிவு செய்யும் முறையென்றும் ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமளிக்கிறது.
அமெரிக்காவுக்கு கிடைக்கும் நன்மைகள்
இந்த திட்டத்தின் மூலம், அமெரிக்காவுக்கு இரண்டு முக்கிய நன்மைகள் கிடைக்கும்
வெளிநாட்டிலிருந்து திறமையான நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வருவார்கள்.
அத்துடன் அரசுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கும்.
இதனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதுடன் வேலை வாய்ப்புகள் உருவாகும் எ ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும் அமெரிக்கா குடியேற்றக் கொள்கைகள் கடுமையாக மாறி வருகின்றன. H1B போன்ற வழிகள் எளிதாக கிடைக்காது. ஆனால், செல்வாக்கு உடையவர்களும் திறமையுள்ள நிபுணர்களும், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற விரும்பினால், Golden Card Visa ஒரு புதிய வாய்ப்பு ஆகும்.
இந்த திட்டம் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது அல்ல. முக்கியமாக, செல்வந்த முதலீட்டாளர்கள் மற்றும் உயர்திறன் கொண்ட நிபுணர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும்.
அமெரிக்கா செல்லும் கனவு உள்ளவர்கள், நன்றாக திட்டமிட்டு, முழுமையான தகவலுடன் மற்றும் நிதி தயாரிப்புடன் செல்ல வேண்டும்.
இந்த புதிய Golden Card Visa திட்டம், அமெரிக்காவில் நிறைய வசதிகளும் நன்மைகளும் வழங்கும் ஒரு நேரடி வழியாக அமைகிறது.





