அமெரிக்க ஜனாதிபதியாகும் முயற்சியில் ட்ரம்ப் – Facebook மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!
Lஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் Facebook, Instagram கணக்குகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு அவரின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கியபோது அவரின் கணக்குகள் முடக்கப்பட்டன.
வன்முறையில் ஈடுபட்டோரை அவர் சமூக ஊடகத்தில் புகழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரின் கணக்குகள் தடைசெய்யப்பட்டன.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவரின் கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் இருந்தன.
அமெரிக்க மக்கள் அதிபர் வேட்பாளர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்தது.
எனினும் டிரம்ப் பெரும்பாலும் தமது சொந்த சமூக ஊடகத் தளமான Truth Social-இல் அதிகம் கருத்துத் தெரிவிக்கிறார்.
(Visited 4 times, 1 visits today)