அனுராதபுர மருத்துவமனை பாலியல் வழக்கு: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 28ம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் இன்றைய தினமும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
(Visited 46 times, 1 visits today)





