“Zoom” நிறுவனம் ஊழியர்களுக்கு விடுத்த உத்தரவு

கொரோனா பரவல் காலக்கட்டத்தின்போது பலரும் வீட்டிலிருந்து வேலை செய்ய உதவியாக Zoom சேவை இருந்த நிலையில் ஊழியர்களுக்கு விசேட உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது அந்த Zoom நிறுவனத்தின் ஊழியர்களே மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலையிடத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை வசிக்கும் ஊழியர்கள் வாரத்திற்கு இரு முறையாவது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
அந்த நடைமுறையே ஆக அதிக பலன் அளிக்கக்கூடியது என்று நிறுவனம் சொன்னது.
புதிய மாற்றம் இம்மாதமும் (ஆகஸ்ட்) அடுத்த மாதமும் (செப்டம்பர்) நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Amazon, Disney உட்படப் பல பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாள்களைக் குறைத்திருக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)