நியூயோர்க்கின் முதல் முஸ்லிம் மேயராக மம்தானி பதவியேற்பு
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயோர்க்கின் மேயராக, 34 வயதான ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) இன்று அதிகாலை பதவியேற்றார்.
மேன்ஹாட்டனில் (Manhattan) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சிட்டி ஹால் (City Hall) சுரங்க ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ரகசிய விழாவில், புனித குர்ஆன் மீது கைவைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் மூலம் நியூயோர்க் மாநகரின் முதல் முஸ்லிம் மேயர், முதல் தெற்காசிய வம்சாவளி மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் எனப் பல வரலாற்றுச் சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
இன்று மதியம் சிட்டி ஹாலில் நடைபெறவுள்ள பொதுப் பதவியேற்பு விழாவில், பெர்னி சாண்டர்ஸ் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இளைய மேயராகப் பொறுப்பேற்றுள்ள மம்தானிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன





