ஐரோப்பா

உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஜெலென்ஸ்கி விடுத்த கோரிக்கை

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் செய்தது போல், உக்ரைனிலும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலில் ஜெலென்ஸ்கி இந்தக் கோரிக்கையை விடுத்ததாகக் கூறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடிந்தால், அவர் நிச்சயமாக மற்ற போர்களை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.

இதனிடையே, ரஷ்யா தனது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், இரு தலைவர்களும் உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் உரையாடினர் என்று உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்