உக்ரைன் வீரர்களுக்கு ஈடாக வடகொரியா வீரர்களை பரிமாற்ற தயாராகும் செலன்ஸ்கி!
ரஷ்யாவால் பிடிக்கப்பட்ட உக்ரேனியர்களுக்கு ஈடாக, கைப்பற்றப்பட்ட இரண்டு வட கொரிய வீரர்களை மாற்றிக் கொள்ள வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வந்துள்ளார்.
ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் நமது வீரர்களுக்கான பரிமாற்றத்தை ஏற்பாடு செய்ய முடிந்தால், கிம் ஜாங் உன்னின் வீரர்களை அவரிடம் ஒப்படைக்க உக்ரைன் தயாராக உள்ளது” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியாவிலிருந்து முதலில் பிடிக்கப்பட்ட வீரர்களைத் தவிர, சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் பலர் இருப்பார்கள். ரஷ்ய இராணுவம் வட கொரியாவின் இராணுவ உதவியைச் சார்ந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)