ஐரோப்பா செய்தி

அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர் – ஜெலன்ஸ்கி நம்பிக்கை

ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ராஜதந்திர நடவடிக்கை மூலம் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வானொலி மூலம் உரை நிகழ்த்திய அவர், ரஷ்யா கைப்பற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் திருப்பப் பெறும்வரை அமைதியை நிலைநாட்ட முடியாது என்று கூறினார்.

டிரம்ப் நினைத்தால் போர் விரைவில் முடிவடையும் என்றும், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், ரஷ்யா அங்கு முன்னேறி வருவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்ய போரில் நட்பு நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சொந்த ஆயுத உற்பத்தியை உக்ரைன் அதிகரித்துள்ளதாகவும், நான்கு வகையான ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

 

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி