சாரா சுல்தானாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை? ; சுவிஸ் தகவல் ஆணையம் அதிரடி பரிந்துரை
பிரித்தானியாவின் புதிய இடதுசாரி கட்சியான ‘யுவர் பார்ட்டி’ (Your Party) தலைவர்களுக்கு இடையிலான மோதல், தற்போது பொலிஸ் விசாரணை வரை செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
கட்சியின் இணைத் தலைவரான சாரா சுல்தானா (Zarah Sultana), அனுமதியின்றி உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தை ஆரம்பித்து நிதி திரட்டியதாகக் கூறி, தகவல் ஆணையத்திடம் (ICO) புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தகவல் ஆணையம், இதில் ‘பாரிய குற்றவியல் நடவடிக்கைகள்’ (Serious Criminal Activity) இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து பொலிஸார் மற்றும் மோசடி தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்துவதே சிறந்தது எனப் பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும், இந்த வழக்கை தகவல் ஆணையம் கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள சாரா சுல்தானா, இதனை ஒரு வெற்றியாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஜெரமி கோர்பின் (Jeremy Corbyn) தரப்பு சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதால், கட்சியின் எதிர்காலம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன.





