உலகம் செய்தி

ஏழாவது முறையாக உகாண்டாவின் ஜனாதிபதியான யோவேரி முசேவேனி

உகாண்டாவின்(Uganda) தற்போதய ஜனாதிபதி யோவேரி முசேவேனி(Yoweri Museveni) ஏழாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

81 வயதான முசேவேனி 71.65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, அவர் தனது முக்கிய போட்டியாளரான 43 வயதான போபி வைனை(Bobi Wine) தோற்கடித்தார், அவர் 24.72 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

1986ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கும் யோவேரி முசேவேனி இணைய முடக்கம், ராணுவ ஆதிக்கம் போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரது 40 ஆண்டு கால ஆட்சி போபி வைனால் முடிவிற்கு கொண்டு வரப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யோவேரி முசேவேனியின் வெற்றி வந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!