குழந்தை வன்கொடுமை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த யூடியூபர் கைது
இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை உருவாக்கி அதனை பதிவேற்றியதற்காக ஒரு யூடியூபர்(YouTuber) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட கம்பெட்டி சத்ய மூர்த்தி(Kambeti Satya Murthy), ஹைதராபாத்(Hyderabad) காவல்துறையின் சைபர் கிரைம் அதிகாரிகளால் குழந்தை வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின்(Andhra Pradesh) விசாகப்பட்டினத்தைச்(Visakhapatnam) சேர்ந்த 39 வயதான மூர்த்தி, “வைரல் ஹப்”(Viral Hub) என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களுடன் நேர்காணல்களைக் கொண்ட வீடியோக்களைப் பதிவேற்றினார்.
இந்த நேர்காணல்களின் போது, அவர் ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டார், மேலும் ஒரு வீடியோவில் இரண்டு குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் செய்தார், இது பாலியல் சுரண்டலுக்குச் சமம்.
மூர்த்தி தனது யூடியூப் சேனலில் கிட்டத்தட்ட 400 வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார், மேலும் 2.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக்(subscribers) கொண்டுள்ளார்.





