ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – எதிர்ப்பு வெளியிடும் YouTube
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூகவலைத்தள பயன்பாட்டை தடை செய்யும் முடிவுக்கு YouTube நிறுவனம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி தடை தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், YouTube தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
YouTube சமூக ஊடக தளமாக இல்லையென்று வாதிடும் நிறுவனம், தங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இத்தகைய தடை பிள்ளைகளின் இணைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கலந்துரையாடிய YouTube பேச்சாளர், இந்தத் தடையை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது கட்டுப்பாடுகளால் அல்ல, கல்வி மற்றும் பொறுப்புடன் பயன்படுத்தும் வழிமுறைகளால் தான் சாத்தியமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடையை மீறும் நிறுவனங்களுக்கு 32 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.





