ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்திய இளைஞர் – குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!
ஆஸ்திரேலியாவில் பெர்த் (Perth) அருகே இன்று காட்டுத்தீயை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லூக் ஜோசப் க்ர்குரிக் (Luke Joseph Grguric) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் செயலை பொறுப்பற்றது என வழக்குறைஞர்கள் விமர்சித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காய்ந்த புல்லில் பட்டாசு கொழுத்தியதன் மூலம் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை மற்றும் வான்வழிப் பிரிவுகளின் ஆதரவுடன் 160க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீவிபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.





