ஆசியா

வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளைஞர்கள்! பாக்கிஸ்தானில் டிரெண்டாகி வரும் சிகிச்சை முறை

பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல் சார்ந்து எந்தவொரு கல்வியும் இல்லாத நாடுகளில் அவர்களுக்குப் பல கேள்விகள் வரும்.

பாலியல் சார்ந்து பல சந்தேகங்கள் எழும். மேலும், இணையம், டிவிக்களில் வரும் தவறான விளம்பரங்களால் எங்கு தங்களுக்கு ஆண்மைக் குறைவு இருக்குமோ என்ற அச்சமும் பலருக்கும் இருக்கும்.இதனால் இளைஞர்கள் பல வித வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரசன்னா நடிப்பில் வெளியான கல்யாண சமையல் சாதம் திரைப்படத்திலும் இதைத்தான் விளக்கியிருப்பார்கள். இதனிடையே பாகிஸ்தான் நாட்டிலும் இளைஞர்கள் இதுபோல ஏற்படும் சந்தேகங்கள் காரணமாக சில வினோதமான விஷயங்களை நோக்கிச் செல்கிறார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் வயாக்ரா மாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. சில மருத்துவ காரணங்களுக்காக வயாக்ரா மாத்திரையைத் தடை செய்வதாக அறிவித்துள்ளனர். இதனிடையே ஆண்மையை அதிகரிக்கும் என்று கூறி, அங்குள்ள சிலர் ‘அபிரோடிசியாக்’ என்பதைச் சிகிச்சை என்று தருகிறார்கள். இதற்காக அங்கே இருக்கும் ஒரு வித பல்லியை அவர்கள் குறிவைத்து வேட்டையும் ஆடுகிறார்களாம். இது படுக்கையில் ஆண்களின் திறனை அதிகரிக்கும் என்று சொல்லி விற்கிறார்களாம்.

With Viagra banned, Pakistani men turn to lizard oil to make them 'strong like steel', boost sexual stamina | South China Morning Post

சூடான ரத்தம் கொண்ட பாகிஸ்தானிய ஆண்கள் தங்கள் பாலியல் சந்தேகங்களுக்கு இந்த வகை சிகிச்சையை நாடுவதாகப் பல சர்வதேச ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த முறையில் புதிதாகக் கொல்லப்பட்ட பல்லியில் இருந்து கொழுப்பு பிரித்தெடுக்கப்படுகிறது. பின், அது தேள் எண்ணெய்யில் ஊறவைக்கப்பட்டு, சிவப்பு மசாலா ஒன்றைச் சேர்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும் என்று தருகிறார்கள். காதல் மற்றும் அழகின் கிரேக்க தெய்வமான அப்ரோடைட்டை தான் இந்த பாலுணர்வைத் தூண்டும் ‘அபிரோடிசியாக்’ குறிக்கிறது.

இருப்பினும், இதற்கு பாலியல் உணர்வைத் தூண்டும் மருத்துவ குணங்கள் இருப்பதாக எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும், இப்படியொரு தவறான நம்பிக்கை இருப்பதால் அது பாலியல் வலிமையைத் தரும் ஆண்களின் திறனை அதிகரிக்கும் என்று பல ஆண்கள் கள்ளச் சந்தையில் இருந்து இதை வாங்குகிறார்களாம்.

Aphrodisiac' from lizard a hit in Pakistan | The Manila Times

இதன் காரணமாக ஹார்ட்விக் பகுதியில் இருக்கும் ஒருவித பல்லி கடுமையாக வேட்டையாடப்படுகிறது. இதை விற்கும் ஒருவர் கூறுகையில், “தேவைப்படும் இடத்தில் 5 சொட்டு விட்டு நன்றாக மசாஜ் செய்தால் போதும், அதன் பின்னர் பாலியல் ஸ்டாமினா வேற லெவலுக்கு செல்லும்” என்கிறார். இந்திய முள்ளந்தண்டு வால் பல்லி அல்லது ராஜஸ்தானில் ‘சாண்டா’ என்றும் அழைக்கப்படும் இந்த வகை பள்ளிகள் எப்போதும் தனிமையில் தான் வசிக்கும். இவை பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் உள்ள சமவெளிகளில் அதிகம் வேட்டையாடப்படுகிறது. இந்த வகை பல்லிகள் சூரிய குளியலுக்கு வெளியே செல்லும் போது குறி வைத்து வேட்டையாடுகிறார்கள்.எப்படிப் பிடிப்பார்கள் மீன்பிடி கம்பி வலைகளைப் பயன்படுத்தி இவர்கள் பல்லிகளைக் குறிவைத்துப் பிடிக்கிறார்கள்.

இந்த வகை பல்லிகள் மின்னல் வேகத்தில் ஓடக்கூடியது என்பதால் அவற்றைப் பிடித்தவுடன் அதன் முதுகை உடைத்துவிடுவார்களாம். இந்த பல்லிகளைப் பிடித்துக் கொள்வது கஷ்டமாக இருந்தாலும் அதுதான் தங்கள் வாழ்வாதாரமாக உள்ளதாகக் கூறி வேதனைப்படுகிறார் 4ஆம் தலைமுறையாகப் பல்லிகளை பிடிக்கும் முஹம்மது நசீர். பாகிஸ்தான் போன்ற ஒரு பழமைவாத நாட்டில், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. அங்கே குழந்தை பெறவில்லை என்றால் உறவினர்களின் பேச்சுக்கு ஆளாக வேண்டி இருக்கும். இந்தச் சூழலில் வயாகராவும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற முறையற்ற சிகிச்சை முறைகள் டிரெண்டாகி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content