இலங்கை

யாழில் டெங்கு காய்ச்சலால் இளைஞன் மரணம்

யாழில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் இன்று(27) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் என்ற 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் ,அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , மூளை சாவடைந்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று(27) காலை உயிரிழந்தார்.

அதேவேளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் , நேற்றைய தினம் (26) மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!