திருகோணமலையில் விபத்தில் சிக்கி இளைஞர் பலி!
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் .
இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





