புத்தர் சிலைகளை உடைத்து காணொளி வெளியிட்ட இளைஞர் கைது
புத்தர் சிலைகள் மற்றும் தெய்வச் சிலைகளை சேதப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்
புத்தர் என கூறி புத்தர் சிலைகள் மற்றும் தெய்வ சிலைகளை அழித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கமுவ, அம்பன்பொல சமகி மாவத்தையில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், புத்த மதத்தை அவமதித்து, சிலைகளை வணங்க வேண்டாம் என்று கூறி, புத்தர் சிலைகள் மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை காட்டுக்குள் வீசி எறிந்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட வீடியோவில், சில சிலைகளை அறிமுகப்படுத்தி, கருங்கல்லில் அடித்து, அவற்றை தனது முகநூல் மற்றும் டிக் டாக் கணக்கில் சேர்த்துள்ளார்.
குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து அம்பன்பொல பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
வீடியோவில் காட்டப்பட்டுள்ள இடத்தில் தான் கோவில் நடத்தி வந்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பல வருடங்களாக மிகுந்த பக்தியுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தும் பலன் கிடைக்காததால் கடவுள் மற்றும் புத்தர் சிலைகளை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஒரு காலத்தில் குறி சொல்பவராக பணியாற்றியதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மஹவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.