கொலை குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!
16 வயது பாடசாலை மாணவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 27 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார். இவரின் காதலி எனக் கூறப்படும் குறித்த 16 வயது சிறுமி தங்கி இருந்த அறைக்கு சென்று கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அதிக இரத்த கசிவு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
இன்று காலை கொழுந்து மடுவமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய தொலைபேசியும் அருகில் உடைந்த நிலையில் காணப்பட்டது.
கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





