பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து!
இங்கிலாந்தின் வடக்கிழக்கு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்கள் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு முகக்கவசம் அணிந்து மக்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு £100 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கும் நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இவ்வாறாக முகத்தை மூடி மறைக்கும் ஆடைகளை (balaclavas) அணியும் நபர்கள், கடந்த ஆறு மாதங்களாக குழந்தைகள் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
மின்சார பைக்குகள் மற்றும் குவாட் பைக்குகளில் நகரம் முழுவதும் அவர்கள் சவாரி செய்வதாகவும், மோட்டார் சைக்கிள்களில் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை முன்னெடுப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மாத்திரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் 800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இவ்வாறான நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அணியும் புர்காவை தடை செய்ய வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





