உலகின் நீளமான எலக்ரிக் டூத் பிரஷை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளம் ஜோடி!
உலகின் நீளமான எலக்ரிக் டூத் பிரஷை உருவாக்கி இங்கிலாந்தை சேர்ந்த ஜோடி ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கிட்ஸ் இன்வென்ட் ஸ்டஃப் என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஷெஃபீல்டைச் சேர்ந்த ரூத் அமோஸ், 34, மற்றும் ஷான் பிரவுன், ஆகியோரே சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்கள் 11 வயது ரசிகனின் வேண்டுகோளுக்கு இணங்க 6 அடி 7 அங்குலம் (2.008 மீட்டர்) நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் டூத்பிரஷை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதனை உருவாக்க அவர்களுக்கு 05 நாட்கள் எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு நன்கு அறியப்பட்ட சாதனை புத்தகத்தில் அதன் இடத்தைப் பிடிக்கும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)