இனி ஜெமினி AI மூலம் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்
கூகுள் தனது ஏ.ஐ அசிஸ்டண்ட்டான ஜெமினியில் மெதுவாக புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டுக்கான ஜெமினி ஆப்-ஐ அப்டேட் செய்தது. இதன் மூலம் நீங்கள் வெளியே செல்ல directions கேட்கும் போது ஜெமினி தானாகவே கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வழி சொல்கிறது.
ஜெமினி ஆப் ஓபன் செய்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை commands செய்ய வேண்டும். அதாவது, ‘navigate to [place]’ or ‘take me to [x]’ என்று கொடுக்க வேண்டும்.
நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை ஜெமினியிடம் தெரிவித்த பின், அது உங்களுக்கு ரூட் சம்மரி (summary) காண்பிக்கும். அதோடு நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் காண்பிக்கும்.
சிறிது நேரம் கழித்து, ஏ.ஐ-ல் இயங்கும் assistant ஜெமினி, தானாகவே கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து, உங்களுக்கு வழி சொல்லும். இந்த அம்சம் எதற்காக என்றால் நீங்கள் கூகுள் அசிஸ்டண்ட்டிற்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம்.
கூகுளின் ஜெமினி ஆப் இப்போது அனைவருக்கும் கிடைக்காது. ஆனால் நீங்கள் மூன்றாம் தரப்பு இணையதளத்தில் இருந்து APK ஃபைல்ஸ் டவுன்லோடு செய்து, அதை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கூகுள் அசிஸ்டண்ட்-க்கு (Google Assistant) மாற்றாகப் பயன்படுத்தலாம்.