Archive செய்யாமல் WhatsApp சாட்களை மறைத்து வைக்கலாம்
பிரைவேட்டாக வைக்க நினைக்கும் வாட்ஸ்அப் சாட்டுகளை ஆர்சிவ் அம்சம் பயன்படுத்தாமல் மறைத்து வைப்பதற்கு இருக்கும் வேறு ஒரு வழியை படிப்படியாக இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் என்பது தற்போது உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக உள்ளது. ஆனால் ஒரு சில சமயங்களில் குறிப்பிட்ட சில நபர்களுடன் நீங்கள் பேசிய உரையாடல்களை டெலிட் செய்யாமல் வைத்திருக்கும் அதே நேரத்தில் அவற்றை பிரைவேட்டாக யாருக்கும் தெரியாமல் சேமிக்க வேண்டும் என்று நினைக்கலாம். இதற்கு Archive என்பது சிறந்த அம்சமாக இருந்தாலும் உங்களுடைய சாட்களை மறைத்து வைப்பதற்கு வேறு சில வழிகளும் உள்ளன. அந்த வகையில் Archive அம்சத்தை மட்டுமே நம்பி இருக்காமல், உங்களுடைய சாட்டுகளை பிரைவேட்டாக மறைத்து வைப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும்.
நீங்கள் மறைக்க நினைக்கும் சாட்டுகளை திறக்கவும்.
மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி கொண்ட ஐகானை தட்டுங்கள்.
இங்கு லாக் சாட் (Lock Chat) என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.
இப்போது ‘கீப் திஸ் சாட் லாக்கட் அண்ட் ஹிடன்’ (Keep this chat locked and hidden) என்ற வாக்கியம் உங்களுடைய ஸ்கிரீனில் பாப்-அப் ஆவதை உங்களால் பார்க்க முடியும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த சாட்டுகளை லாக் செய்வதற்கு கண்டின்யூ (Continue) என்பதை கிளிக் செய்யுங்கள்.
இவ்வாறு உங்களுடைய போனின் பயோமெட்ரிக் அதாவது முகம் அல்லது கைரேகை பயன்படுத்தி மட்டுமே திறக்கக்கூடிய வகையில் ஒரு சில சாட்டுகளை உங்களால் பிளாக் செய்ய முடியும். அதே நேரத்தில் சாட்டுகள் லாக் செய்யப்பட்டிருந்தால் அதற்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் கான்டாக்டும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கான நோட்டிஃபிகேஷன் என்பது வாட்ஸ் அப்பில் 1 நியூ மெசேஜ் (1 New message) என்று காட்டப்படும்.
ஒரு வேளை இந்த சாட்டுகளை பிரைவேட்டாக வைத்திருக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நீங்கள் லாக்டு சாட்ஸ் (Locked Chats) ஃபோல்டருக்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் அன்பிளாக் செய்ய நினைக்கும் சாட்டை தேர்வு செய்யுங்கள். இப்போது மூன்று புள்ளி கொண்ட ஐகானை கிளிக் செய்து அதில் அன்பிளாக் (unblock) சாட் என்பதை கிளிக் செய்வதன் மூலமாக இந்த செயல்முறையை நீங்கள் நிறைவு செய்யலாம்.