ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல் : ஹூதி போராளிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஏடன் வளைகுடாவில் ரூபிமார் சரக்குக் கப்பலைத் தாக்கியதாகவும், கப்பல் இப்போது மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் ஏமனில் உள்ள ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹூதிகள் துறைமுக நகரமான ஹொடைடாவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறியுள்ளார்.
“கப்பல் கடுமையாக தாக்கப்பட்டது, இதனால் அது முற்றிலும் நிறுத்தப்பட்டது. கப்பலுக்கு ஏற்பட்ட விரிவான சேதத்தின் விளைவாக, அது இப்போது ஏடன் வளைகுடாவில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது” என்று சாரியா கூறினார்.
ஈரானுடன் இணைந்த ஹூதி படைகள் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்