அமெரிக்காவின் முக்கியப் பெட்ரோல் நிறுவனங்களை குறிவைக்கும் ஏமனின் ஹெளதி கிளர்ச்சிக் குழு
அமெரிக்காவின் முக்கியப் பெட்ரோல் நிறுவனங்களை குறிவைக்கப் போவதாக ஏமனின் ஹெளதி கிளர்ச்சிக் குழு மிரட்டல் விடுத்துள்ளது.
மனின் ஹெளதி கிளர்ச்சிக் குழு மீது அமெரிக்கா இந்த ஆண்டு தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதற்குப் பதிலடியாக நிறுவனங்களைத் தாக்கப்போவதாக மனின் ஹெளதி கிளர்ச்சிக் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹெளதி மனிதாபிமான ஒருங்கிணைப்பு நிலையம் 13 நிறுவனங்கள் உள்ளிட்ட சிலவற்றைப் பகைமைத் தரப்புகள் என்று அறிவித்தது.
முன்னதாக செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களைத் தாக்கப்போவதில்லை என்று குழு வாஷிங்டனுடன் சமரசம் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கியப் பெட்ரோல் நிறுவனங்களை குறிவைக்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)





