பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை – சில பாதைகள் மூடப்பட்டுள்ளன!

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு கடுமையான காற்று குறித்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பயண சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதுடன், பெரும்பாலான பூங்காக்கள், பாலங்கள், ரயில் பாதைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மஞ்சள் எச்சரிக்கையானது 26 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று தென்மேற்கின் கடலோரப் பகுதிகளில் வீசிய காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காற்று காரணமாக M48 செவர்ன் பாலம் இரு திசைகளிலும் மூடப்பட்டது. அதேநேரம் A628 Woodhead பகுதியில் மிகப் பெரிய வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)