இந்தியா

வெறுப்பு ஒழிக்கப்படும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும்! ராகுல் காந்தி

வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கடந்த ஆண்டு (2022) இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தாண்டு (2023) தொடக்கத்தில் காஷ்மீரில் நிறைவடைந்த சுமார் 4,000 கிமீ தூரம் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் மாண்டேஜ் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிந்துள்ள ராகுல் காந்தி இந்தியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், அன்பினையும், ஒற்றுமையினையும் நோக்கி நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் கோடிக்கணக்கான பாதச்சுவடுகள் நாளைய சிறந்த நாட்டுக்கு அடித்தளமிட்டுள்ளது.

வெறுப்புகள் அழிக்கப்படும் வரை, இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும். இது எனது வாக்குறுதி” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 4,000 கிமீ பயணத்தின் வீடியோ காட்சியையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

 

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!