உலகம் செய்தி

36 வயதில் உயிரிழந்த WWE வீரர்

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள்.

ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற WWE வீரர் ப்ரே வியாட்டின் தந்தையிடம் இருந்து தற்போது ஒரு அழைப்பு வந்தது. எங்கள் WWE உறுப்பினர் ப்ரே வியாட் நெஞ்சுவலியால் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற சோக செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது மறைவிற்கு WWE அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!