செய்தி விளையாட்டு

WWE வீரர் ஸ்டைல்ஸ்க்கு போட்டியின் போது காயம் – நேரலையில் கால் உடைந்ததால் போட்டி நிறுத்தம்

WWE எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்தம் போட்டியில் பிரபல வீரர் ஏஜே ஸ்டைல்ஸ் விளையாடும் போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

நாடகப் பாணியில் நடைபெறும் WWE மல்யுத்த போட்டியில் முக்கிய தொடர்களில் ஒன்றாக Smack down நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பிரபல மல்யுத்த வீரர் ஏஜே ஸ்டைல்ஸ் களமிறங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு டபிள்யூ டபிள்யூ ஈ தொடருக்கு அவர் திரும்பினார்.

47 வயதான ஏஜே ஸ்டைல்ஸ் அபாரமாக சண்டை போடுவதில் வல்லவர். ரிங்கில் உள்ள கயிற்றில் ஏறி சுழன்று சுழன்று அடித்து எதிரிகளை நிலை குலைய வைப்பார்.

இந்த நிலையில் ஏ ஜே ஸ்டைல்ஸ் இன்று ஸ்மாக்டவுன் போட்டி ஒன்றில் விளையாடினார்.

அதில் கார்மேலோ ஹையர் என்ற வீரர் உடன் சண்டை நடைபெற்றது.

அதில் ஏஜே ஸ்டைல்ஸ் கயிற்றில் ஏறி சண்டையிடும் போது அவருடைய கால் கணுங்கால் பகுதி உடைந்தது.

இதனை அடுத்து ஏஜே ஸ்டைல்ஸ் வலியால் துடித்தார். இதனைப் பார்த்த நடுவர் உடனடியாக போட்டியை நிறுத்தினார்.

இதன் அடுத்து ஏஜே டைல்ஸ்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏஜே ஸ்டைல்ஸ் காலை மருத்துவர்கள் சோதனை செய்தனர்.

இதில் அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஏஜே ஸ்டைல்ஸ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏஜே ஸ்டைல்ஸ் சில காலத்திற்குப் பிறகுதான் தற்போது டபிள்யூ டபிள்யூ இ போட்டிக்கு திரும்பினார்.

ஆனால் திரும்பிய முதல் நாளில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. நாடக பாணியில் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு wwe போட்டி நடத்தப்படும்.

ஆனால் இதில் வீரர்கள் சண்டையிடுவது போல் பொய்யாக காண்பிக்கபட்டாலும், அதன் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு சாகசமும் உண்மைதான்.

இப்படிதான் ஏஜே ஸ்டைல்ஸ் மல்யுத்த சாகசத்தில் ஈடுபட்ட போது தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது .

இதிலிருந்து ஏஜே ஸ்டைல்ஸ் மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!