மோசமான தோல்விகள் – இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் அணி – காத்திருக்கும் நெருக்கடி

மோசமான தோல்விகளை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-174 இன்று காலை 05.05 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டை வந்தடைந்தது.
அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கூடியது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியை தழுவியது.
9 போட்டிகளில் 7ல் இலங்கை அணி தோல்வியடைந்தது. நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் நியூசிலாந்திடம் 5 விக்கெட்டுக்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்குச் சென்றது.
இதன்படி எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தகுதி பெறுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.