ஆசியா செய்தி

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியப் பெண் செய்த மோசமான செயல்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருடியதாக இந்திய பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 23 வயது டூடி மான்சி எனும் அந்தப் பெண்ணுக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இம்மாதம் 17ஆம் திகதி அங்குள்ள கடை ஒன்றில் 20 வெள்ளி மதிப்பிலான உதட்டுச் சாயம் திருட்டுப்போனது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடையில் நடத்தப்பட்ட விசாரணை, ரகசியக் கண்காணிப்புக் கேமரா வழி கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அதனைத் திருடியதாக நம்பப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்.

சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்குள் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பெண் அதே நாளில் மற்றொரு கடையில் 135 வெள்ளி மதிப்புள்ள ஒப்பனைப் பொருள்களைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

கடைத் திருட்டுச் சம்பவங்களைக் காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. குற்றம் சாட்டப்படுவோருக்குத் தக்க தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 39 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!