பிளேக் நோய் தொற்றிற்கு பின்னர் முதன்முறையாக உலக மக்கள் தொகை பாரிய வீழ்ச்சி
பிளேக் நோய் தொற்றிற்கு பின்னர் முதன்முறையாக உலக மக்கள் தொகை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
பல நூற்றாண்டுகளில் முதல் முறையாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளத.
Bill & Melinda Gates அறக்கட்டளையின் நிதியுதவியுடன், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகளாவிய கருவுறுதல் விகிதங்கள் தொடர்ந்து கீழ்நோக்கிச் செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருவுறுதல் விகிதங்கள் 1950ஆம் ஆண்டு 4.84 ஆக இருந்த விகிதம் 2021ஆம் ஆண்டு 2.23 ஆகக் குறைந்து.
2050ஆம் ஆண்டு 1.83 ஆகவும் 2100ஆம் ஆண்டளவில் 1.59 ஆகவும் குறையும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எளிதில் கிடைக்கக்கூடிய கருத்தடைகளை மட்டுமல்ல, பல பெண்கள் தாமதமாக அல்லது குறைவான குழந்தைகளைப் பெறுவதைத் தேர்வுசெய்கிறதும் இந்த நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம் என சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மற்ற அதிக வருமானம் பெறும் நாடுகளைப் போலவே, இங்கிலாந்திலும் கருவுறுதல் விகிதம் சராசரியை விட குறைவாக உள்ளது, 2021ஆம் ஆண்டு வெறும் 1.49 சதவீதமாக காணப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டு 2.19 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த 25 மற்றும் 75 ஆண்டுகளில் 1.38 மற்றும் 1.30 ஆக குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.