இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம் உலகளாவிய அறிவியல் மற்றும் கலாச்சார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“தூய நிலத்தின் நட்சத்திரம்” (Star of Pure Land) என அழைக்கப்படும் இந்த ரத்தினம் 3,536 கரட் நிறையுடையது.

அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது.

இந்த கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக உள்ளதென இரத்தினவியலாளர்கள் கூறுகின்றனர்.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இயற்கை புவியியல் செயல்முறைகளால் உருவான இதை செயற்கையாக வடிவமைக்க முடியாது என்றும், அதை உருவாக்க தேவையான நிலைகள் மிகவும் அரிதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த இரத்தினம் அறிவியல், கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அதனை பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவில் உள்ள Tucson Masterpiece Gem Society க்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநாட்டில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள், விஞ்ஞானியர்கள் மற்றும் கலாச்சார பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இரத்தினத்தின் அறிவியல் மற்றும் வரலாற்று ஆவணங்கள் நிரந்தர பதிவில் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!