உலகின் பூச்செடிகள் ஆபத்தில் – பாதி அழிந்துபோகும் அபாயம்
உலகின் பூச்செடிகளில் ஏறத்தாழப் பாதி, அழிந்துபோகும் அபாயத்தில் லண்டனின் கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுமுதல் 18,800க்கும் மேற்பட்ட புதிய வகைத் தாவரங்களுக்கும் காளான்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிலத் தாவரங்களின் அனைத்துலகத் தரவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதில் தற்போது 350,000 தாவர இனங்கள் உள்ளன. கியூ தோட்டம், விதைகளைச் சேமித்துவைப்பது, எஞ்சியுள்ள அதன் தாவர, காளான் மாதிரிகளைப் பராமரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பல உயிரினங்களைப் பாதுகாக்க முற்படுகிறது.
ஆசியா, தென்னமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த சில பகுதிகளில் குறைவான தாவர இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
காலப்போக்கில் செல்வமும் நிபுணத்துவ அறிவும் வேறுபட்ட நிலைகளில் இருப்பதும் தாவரவியலின் வளர்ச்சி வேகமும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
கியூ தோட்டம் வெளியிட்ட அறிக்கையின்படி உலகில் உள்ள 2.5 மில்லியன் காளான் இனங்களில் 155,000 மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன.