இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை வெற்றி – அமெரிக்காவில் மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது .

மே 4ஆம் திகதி ரோனல்ட் ரீகன் மருத்துவ நிலையத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கடும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அந்தச் சிகிச்சை ஒரு நற்செய்தியாக மாறியுள்ளது.

41 வயது ஓஸ்கார் லரென்ஸாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் சிறுநீர்ப்பையின் பெரும் பகுதியை இழந்தார் ஓஸ்கார்.

பிறகு புற்றுநோயால் அவருடைய இரு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டன. உறுப்பு தானம் செய்தவரிடமிருந்து அவருக்குச் சிறுநீரகங்களும் சிறுநீர்ப்பையும் கிடைத்தன.

8 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்குப்பின் அவருக்கு அந்த உறுப்புகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. சிறுநீரகங்களும் சிறுநீர்ப்பையும் இணைக்கப்பட்டன.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவைச் சிகிச்சை முடிந்தவுடனேயே நல்ல மாற்றங்கள் தெரிந்ததாக மருத்துவர் கூறினார்.

சிறுநீரகங்களால் உடனடியாக சிறுநீரைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது, அது சீராகச் செயல்பட்டது என்றார் அவர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!