உலகில் முதல் முறையாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மீன் இறைச்சி

முதல் முறையாக எலும்பு துண்டுகள் இல்லாத மீன் இறைச்சி செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், இந்த இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த Steakholder Foods என்ற நிறுவனம் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Umami Meats நிறுவனத்துடன் இணைந்து, குரூப்பர் என்ற மீனின் செல்களை எடுத்து அவற்றை ஆய்வுக் கூடத்தில் செயற்கை முறையில் பெருகச் செய்து, மீன் இறைச்சியை உருவாக்கியுள்ளது.
ஆய்வுக் கூடங்களில் பயோ தொழில்நுட்பம் மூலம் பல வகையான செல்களை வளர்த்தெடுத்து செயற்கை முறையில் மாட்டுக் கறி உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகளை உருவாக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்காவில் இதற்கு அங்கீகாரம் பெற்று, விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)