சிங்கப்பூரில் உலகிலேயே முதல் செயற்கை நுண்ணறிவு பேரங்காடி திறப்பு

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட உலகிலேயே முதல் பேரங்காடி திறக்கப்பட்டுள்ளது.
FairPrice குழுமம் இதனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய FairPrice Finest கிளை, பொங்கோல் Digital District எனும் மின்னிலக்க வளர்ச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
சிங்கப்பூரர்களுக்குப் பொழுதுபோக்காகும் மளிகைப் பொருட்கள் வாங்கும் அனுபவத்தை, இந்த புதிய வசதிகள் மேலும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட பரிந்துரைகளைப் பெற முடியும். அதோடு, தள்ளுபடிகள் அமையத்தோடு கட்டணத்தை செலுத்தும் தானியக்க முறைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
FairPrice குழுமம், இந்த புதிய முயற்சியின் தொடக்கமாக, அடுத்த மூவாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புதிய மின்னிலக்கத் தீர்வுகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
மளிகைப் பொருள் வாங்கும் அனுபவத்தில் புத்தாக்கம் மற்றும் வசதியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.