உலகின் முதல் 07 நட்சத்திர விடுதி : பிற்காலத்தில் தீண்டத்தகாத ஹோட்டல் என்ற புனைப்பெயருடன் இருக்கும் பேய் நகரம்!
கிங் சார்லஸுக்குச் சொந்தமானதாக கூறப்பட்ட ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்று தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
குறித்த ஹோட்டல் கடந்த 10 தசாப்பத காலமாக பேய்நகரம் போல் காட்சியளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சைப்ரஸ் நகரமான வரோஷாவில் பரவலான கொள்ளை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ரிசார்ட் ஒரு காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து நட்சத்திரங்களையும் பிரபலங்களையும் ஈர்த்தது. தீவின் வடக்குப் பகுதியைக் கட்டுப்படுத்தும் துருக்கிய குடியரசு மெகா கோல்டன் சாண்ட்ஸ் ஹோட்டல் மன்னர் சார்லஸிற்கு சொந்தமானது எனக் கூறியுள்ளது.
1974 இல் முதன்முதலில் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டபோது “உலகின் முதல் ஏழு நட்சத்திர ஹோட்டல்” என்று பெருமையுடன் அழைக்கப்பட்டது.
இந்த ஹோட்டல் அமைந்துள்ள தளம் பரந்தளவில் காணப்பட்ட நிலையில், விருந்தினர்களை அழைத்து செல்ல ரயில் பாதை போடப்பட்ட ரயில் சேவையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் இவ்வாறு பிரமாண்டமாக காணப்பட்ட இந்த ஹோட்டல் பிற்காலப்பகுதியில், கயவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கைவிடப்பட்டது. தீண்டத்தகாதது என்ற புனைப்பெயரையும் பெற்றது.
பல காவலர்கள் அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சுற்றுப்புற மைதானத்திற்குள் நுழைய அனுமதி தேவை.