உலகின் ஆழமான ஹோட்டல் பூமிக்கடியில் 400 மீட்டர் தொலைவில் திறந்து வைப்பு

பூமிக்கடியில் 400 மீட்டர் தொலைவில் மக்கள் ஓய்வெடுக்க புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.
‘உலகின் ஆழமான ஹோட்டல்’ என்று அழைக்கப்படும் டீப் ஸ்லீப் ஹோட்டல், ஐக்கிய இராச்சியத்தின் நார்த் வேல்ஸில் உள்ள எரி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் ஸ்னோடோனியா மலைத்தொடர்களின் கீழ் அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹோட்டலில் 4 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வார இறுதி நாட்களில் மட்டும் இங்கு தங்குவதற்கு திறந்திருக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில உடல் பாதுகாப்பு உபகரணங்களும், சுற்றுச்சூழல் தொடர்பான பல தகவல்களும் வழங்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரவு தங்குவதற்காக விடுதிக்கு வரும் இருவருக்கு 350 பவுண்கள் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)