இலங்கை

சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 2-ம் உலகப் போர் குண்டு

வெடிக்காத 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு சிங்கப்பூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 25-ஆம் திகதி சிங்கப்பூர் அப்பர் புக்கித் திமா என்ற பகுதியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் குழுவினர், அந்த குண்டை ஆராய்ந்தனர்.

இதில், இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த குண்டை போர் நினைவுச் சின்னத்துக்கு எடுத்துச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியிலேயே செவ்வாய்க்கிழமை காலை குண்டை அழிக்கும் பணியை மேற்கொள்ள வெடிகுண்டு அகற்றும் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால், குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதி மக்களை பாதுகாப்பு காரணத்துக்காக வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர்.

மேலும், கடைகள், அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணிமுதல் இரவு 7 மணிவரை குண்டு அகற்றும் பணி நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் சாலையும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!