உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலவரம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.
இந்திய அணிக்கு இன்னும் 4 (ஆஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு 6(4 இந்தியா 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும் இலங்கைக்கு ( 1 தென் ஆப்பிரிக்கா 2 ஆஸ்திரேலியா) 3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.